சுடச்சுட

  

  கமுதி சத்திரிய நாடார் பெண்கள் மேனிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளின் ஒரு வார சேவை முகாம் வியாழக்கிழமை நிறைவுபெற்றது.

  மகர்நோன்பு திடலில் நடைபெற்ற முகாம் துவக்க விழாவுக்கு வெ.முத்துக்குமார் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் எஸ்.கே.எஸ்.ரகுநாத் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை து.சேர்மம் வரவேற்றார். என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.கனக சண்முகம்மாள் நன்றி கூறினார். சாலை சுத்தம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட சேவைகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

  பேரூராட்சி தலைவர் எஸ்.கே.சி.ரமேஷ்பாபு, செயல் அலுவலர் ஏ.தனபால் ஆகியோர் அறிவுறுத்தலில் மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை பிரித்தெடுத்து, பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாணவிகள் நடத்தினர். முகாமை முன்னிட்டு நடைபெற்ற இலவச பல் மருத்துவ முகாமில் கமுதி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அபேதா பிரதாபன், பல் மருத்துவர் ஜி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். பெண்களுக்கான தொற்றா நோய்கள் குறித்து மாணவிகள் பிரசாரம் செய்தனர்.

  முகாம் ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் கவனித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai