Enable Javscript for better performance
மேலச்செல்வனூரில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மேலச்செல்வனூரில் "அம்மா' திட்ட முகாம்

    By முதுகுளத்தூர்  |   Published on : 11th October 2014 12:44 AM  |   அ+அ அ-   |    |  

    கடலாடி அருகே மேலச்செல்வனூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க.நந்தக்குமார் உத்தரவின் பேரில் கடலாடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் லெட்சுமி தலைமை வகித்தார்.

    வட்ட வழங்கல் அலுவலர் முருகவேல், வருவாய் ஆய்வாளர் கோகுல்நாத், கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம் என 20 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன. முகாமில் கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai