சுடச்சுட

  

  ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 6 அகதிகள் கைது

  By ராமநாதபுரம்  |   Published on : 11th October 2014 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 6 வயதுக் குழந்தை உள்பட 6 அகதிகளை ராமநாதபுரம் கியூ பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை காலையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  ராமேசுவரம் தீவு தங்கச்சிமடம் அருகே கண்ணுப்பாடு கடற்கரை அருகில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி பிளாஸ்டிக் பைபர் படகு ஒன்று கரை ஒதுங்கி இருந்தது. இப் படகு கரை ஒதுங்கி நின்றது குறித்து உளவுப் பிரிவு போலீஸார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், ராமேசுவரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த அகதிகள் 6 பேரை போலீஸார் விசாரணை செய்தபோது அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

  விசாரணையில், இலங்கை தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சிவதர்சன் (26) என்பவர், இலங்கையில் தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ராமேசுவரத்துக்கு தனது மகள் சிலோசினி (6) என்பவருடன் இம் மாதம் 4 ஆம் தேதி பைபர் பிளாஸ்டிக் படகில் வந்ததாகத் தெரிவித்தார்.

  இதுகுறித்து மற்ற 4 பேரையும் உளவுப்பிரிவு போலீஸார் விசாரணை செய்ததில், இலங்கையைச் சேர்ந்த சலோமை என்ற நல்லம்மாள் (59) என்பவரும், கும்மிடிப்பூண்டி முகாமில் தங்காமல் வெளியில் தங்கி வசித்துவந்த மற்றொரு அகதியான ரமேஷ் என்ற நவரெத்தினம் (59) உள்ளிட்ட இருவரும் இலங்கைக்கு கள்ளப்படகில் செல்ல முயற்சித்து, ராமேசுவரம் வந்துள்ளது தெரியவந்தது. இவர்கள் 4 பேரைத் தவிர, பிளாஸ்டிக் படகை ஓட்டி வந்த பிரசாத் (26),அவரோடு படகில் வந்த இலங்கை

  அகதி மாணிக்கம் (54) என்பதும் தெரியவந்ததைத் தொடர்ந்து, போலீஸார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

  ராமேசுவரம் தீவு தங்கச்சிமடம் அருகே கம்பிப்பாடு கடற்கரையில் ஏற்கெனவே பிளாஸ்டிக் பைபர் படகு மூலம் வந்திறங்கிய அதே இடத்திலிருந்து மீண்டும் இலங்கைக்குத் தப்பிச் செல்ல முயன்றிருப்பதும் போலீஸாருக்கு தெரிய வந்தது. மேலும், இவர்களிடம் 8 கிலோ கஞ்சா இருப்பதும் கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

  கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் போதைப் பொருள் கடத்தியது, அனுமதியின்றி இந்தியா வந்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கியூ பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai