சுடச்சுட

    

    ராமேசுவரம் கடலில் பலத்த காற்று:மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி மறுப்பு

    By ராமேசுவரம்  |   Published on : 11th October 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரம் கடலில் பலத்த காற்று வீசிவருவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்களுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதனால் சனிக்கிழமை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகே கடலோரப்பகுதியில் அக்டோபர் 7 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அதனைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கடலில் பலத்த காற்று வீசிவருகிறது. இந் நிலையில் புயல் ஞாயிற்றுக்கிழமை ஒரிசா மாநில பகுதியில் கரையை கடக்கவிருப்பதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. இதனையொட்டி ராமேசுவரம் மீனவர்களுக்கு மீன்பிடிக்க மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கவில்லை. இதனால் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் புயல் கரையை கடக்கும்போது அதன் தாக்கம் கடலோரப் பகுதிகளில் இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் படகுகளை பாதுகாக்கவும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 700க்கு மேற்பட்ட படகுகளை கடலில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai