சுடச்சுட

  

  திருவாடானை தாலுகா ஓரியூர்திட்டை பகுதியில் தரமான குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு, அரசு வழங்கும் விலையில்லா பொருள்கள் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

  ஓரியூர்திட்டை பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தரமான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை 300 க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

  பின்னர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த எஸ்.பி. பட்டினம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai