சுடச்சுட

    

    கமுதி பகுதி கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி உற்சவம்

    By கமுதி  |   Published on : 12th October 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி பகுதி கோயில்களில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தி உற்சவம், ஸ்ரீ விநாயகர் சன்னிதானத்தில் நடைபெற்றது.

    கமுதி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில், வெள்ளி கவசங்கள் அணிவித்து, சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜைகள் நடத்தினர்.

    கமுதி ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் உற்சவ ஏற்பாடுகளை சமஸ்தான திவான் மகேந்திரன் ஆலோசனையில் உற்சவ குழுவினர், கோவில் பணியாளர்கள் கு.ராஜா என்ற பாஸ்கரன் பா.ராஜேந்திர செல்வன் உள்ளிட்டோர் கவனித்தனர்.

    அபிராமத்தில் ஸ்ரீசித்தி விநாயகர், இந்து பஜார், அருண் சக்கரவர்த்தி வணிக வளாக லட்சுமி விநாயகர் கோயில், செங்குந்தர் முதலியார் கோயில், நீராவி ஸ்ரீராமலிங்க செüடாம்பிகை அம்மன் கோயில் ஆகிவற்றிலும் உற்சவ பூஜைகள் நடைபெற்றன.

    பேரையூர் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி உற்சவ பூஜை வழிபாட்டில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீவிநாயகரை வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai