Enable Javscript for better performance
திருவாடானை அருகேஇடிதாக்கி விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவாடானை அருகேஇடிதாக்கி விவசாயி சாவு

    By திருவாடானை  |   Published on : 12th October 2014 12:24 AM  |   அ+அ அ-   |    |  

    திருவாடானை தாலுகா அழகமடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிதம்பரம்(55). வயல் வேலைக்கு சென்றவர் இடிதாக்கி வயலில் உயிரிழந்தார்.

    திருவாடானை, அழகமடை, செங்கமடை, அஞ்சுகோட்டை பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த இடியுடன் மழை பெய்தது. அப்போது விவசாயி சிதம்பரம் வயலுக்கு சென்றவர் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. சனிக்கிழமை காலையில் வயலுக்கு சென்றவர்கள் அங்கு உயிரிழந்த நிலையில் சிதம்பரம் கிடந்ததைப் பார்த்துள்ளனர்.

    இது குறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸார் சடலத்தைக் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai