சுடச்சுட

  

  தேசிய விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு விழா

  By ராமநாதபுரம்,  |   Published on : 12th October 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய விருது பெற்ற தலைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு ராமநாதபுரம் ராஜா தினகர் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் அறக்கட்டளை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

  விழாவுக்கு அறக்கட்டளையின் தலைவர் வி.பி.எம்.கே.கருணாமூர்த்தி தலைமை வகித்து, தேசிய விருது பெற்ற தலைத்தோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கே.நளினி செல்வராஜுக்கு நினைவுப்பரிசும், விருதும் வழங்கி பாராட்டினார். விழாவிற்கு அறக்கட்டளை நிர்வாகிகள் டி.ஏ.எல்.சி.திருமூர்த்தி,டி.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.பெரியகருப்பன் வரவேற்றார்.

  பாடகர் ஆர்.வாசு, டாக்டர்.எஸ்.செபாஸ்டின், ஏ.தெட்சிணாமூர்த்தி,டி.அம்மமுத்து, கே.சரவணமுத்து ஆகியோர் ஆசிரியர் பணியின் மகத்துவம் குறித்து பேசினர். சிவகங்கை ஆசிரியர் கோட்டைச்சாமி, சனவேலி ஆசிரியை கே.கன்னிகா ஆகியோர் காமராஜர் கல்விக்கு செய்த தன்னலமற்ற சேவைகள் என்ற தலைப்பில் பேசினார்கள்.

  நிறைவாக தலைமை ஆசிரியை கே.நளினி செல்வராஜ் ஏற்புரை நிகழ்த்தினார். முன்னதாக காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

  ஓவிய ஆசிரியர் பி.அனந்தப்பன், கே.முருகேசன், எம்.காமராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். கே. குகன் நன்றி கூறினார். சிவகாமி நாடார் மகளிர் சங்க நிர்வாகிகள் ஜி.பூங்கோதை, சி.ராஜேஸ்வரி, கே.சந்திரா, எஸ்.அருணா, ஜி.ஜோதி, கோவிந்தம்மாள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai