சுடச்சுட

  

  கமுதி அருகே பெண் மருத்துவரும் அவரது கணவரும் வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டனர்.

  ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் கருப்பணன் மகன் பொன் ரமேஷ்(32). இவர் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகிறார்.

  இவரது மனைவி பார்வதி. சித்த மருத்துவர். கோவிலாங்குளம் காவல் நிலைய சரகம் கொம்பூதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் முருகன் (36). இவர் பொன் ரமேஷிடம் வாடகைக்கு ஜேசிபி வாகனத்தை எடுத்து பயன்படுத்தியுள்ளார். இந்த வகையில் ரூ.2 ஆயிரம் பாக்கி பணம் கொடுக்க வேண்டுமாம்.

  இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கணவருக்கு ஆதரவாக சித்த மருத்துவர் பார்வதியும் பேசியுள்ளார். அப்போது கணவன், மனைவியை முருகன் தாக்கி காயப்படுத்தி விட்டு ஓடிவிட்டாராம்.

  இதுகுறித்து கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

  போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முருகனை தேடி வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai