சுடச்சுட

  

  பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து துவங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற்றது. அதனையொட்டி இரவில் ரயில் பாலத்தின் தூக்குபாலத்தை சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் வகையில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி ஒளிவெள்ளத்தில் காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

  ராமேசுவரம் - மண்டபம் பகுதியை இணைக்கும் வகையில் பாக்ஜலசந்தி ,மன்னார் வளைகுடா இடையே 2 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது பாம்பன் ரயில் பாலம். இந்தப் பாலத்தில் 1914 ஆம் ஆண்டு போக்குவரத்து துவங்கப்பட்டு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியோடு நூறு ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ரயில் பாலம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் பாலத்தின் மிக முக்கிய பகுதியான கப்பல் கடந்து செல்லும் பகுதியிலுள்ள தூக்குபாலத்தில் பல லட்சம் செலவில் 20க்கும் மேற்பட்ட ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai