சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் திங்கள்கிழமை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெற இருப்பதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.ஜோசப்பாத் பிரிட்டன் தெரிவித்துள்ளார்.

  ராமநாதபுரம் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் இரு பாலருக்கும் தனித்தனியாக நடத்தப்பட இருக்கிறது.

  மழலை வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இளநிலைப் பிரிவிலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை முதுநிலைப் பரிவிலும் போட்டிகள் நடத்தப்படும்.

  இதில் முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையும் சான்றுகளும் வழங்கப்படும்.

  மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுவோர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர் என்றும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai