சுடச்சுட

    

    அக்.15-இல் ராமநாதபுரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள்

    By ராமநாதபுரம்,  |   Published on : 13th October 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழு மற்றும் தடகள விளையாட்டுப் போட்டிகள் ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் இம்மாதம் 15 ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.ஜோசப்பாத் பிரிட்டன் தெரிவித்துள்ளார்.

    அவரது செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இம்மாதம் 15-ஆம் தேதி புதன்கிழமை

    நடைபெறுகின்றன. மாற்றுத்திறனாளி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இறகுப்பந்து, டேபிள்டென்னிஸ், கண் பார்வையற்றோர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வாலிபால், மனவளர்ச்சி குன்றிய இருபாலருக்கும் எறிபந்தும், காதுகேளாதவர்களில் இரு பாலருக்கும் கபடி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.

    தடகளப் போட்டிகளைப் பொருத்தவரை கை, கால் ஊனமுற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 50 மீ மற்றும் 100 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், மின் கூடைப்பந்து எறிதல், வீல் சேர் பந்தயம், 100 மீ.பார்வையற்றோர்களில் ஆண்,பெண் உள்ளிட்ட இருபாலருக்கும் நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல்,டென்னிஸ் பந்து எறிதல் மற்றும் 50 மீ மற்றும் 100 மீ.ஓட்டம் உள்ளிட்ட போட்டிகளும் நடைபெறும்.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் 50 மீ, 100 மீ ஓட்டப் பந்தய போட்டிகளும் நடைபெறும். இவை தவிர நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 100 மீ மற்றும் 200 மீ ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் காது கேளாதோரில்

    ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட இருபாலருக்கும் நடத்தப்படும்.

    இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. மாவட்டப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் முதல் இடத்தை பெற்றால் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கலாம். குழுப் போட்டிகளில் முதல் 2 மூன்றாம் இடங்களைப் பெறுவோருக்கும், தடகளப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்போருக்கும் பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்படும்.

    இவ்வாய்ப்பினை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி பரிசுகளை பெறுமாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.ஜோசப்பாத் பிரிட்டன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai