சுடச்சுட

    

     திருவாடானை தாலுகா ஓரிகோட்டை தூய ஜெபமாலை அன்னை ஆலயத் தேர் பவனி நடைபெற்றது.

    தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தேர்ப் பவனித் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 10ஆம்தேதி அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அன்றில் இருந்து ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் ஆராதனைகளும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது அதில் 5 தேரில் அன்னை ஜெபமாலை, அன்னை மாதா, அதிதூதர், அருளானந்தர், ஆரோக்கியமாதா ஆகிய சொரூபங்கள் மின் விளக்கால் அலங்கரிக்கபட்டு ஆலயத்தில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    இதனை ஓட்டி பங்கு தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும் ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னர் வாண வேடிக்கைகள் நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai