Enable Javscript for better performance
கமுதி பகுதி கோயில்களில் மாத கார்த்திகை உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    கமுதி பகுதி கோயில்களில் மாத கார்த்திகை உற்சவம்

    By கமுதி  |   Published on : 13th October 2014 12:33 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி பகுதி கோ.ல்களில் புரட்டாசி மாத கார்த்திகை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கமுதி சத்திரிய நாடார் உறவின்முறை டிரஸ்டுக்குப் பாத்தியமான ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் சன்னிதானத்தில் அபிஷேகங்கள் நடந்தன. பின்னர், வெள்ளிக் கவசம் அணிவித்து, சிறப்பு அலங்கார தீப ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டன.

    ராமநாதபுரம் சேதுபதி மன்னர், சமஸ்தான தேவஸ்தானத்திற்குப் பாத்தியமான ஸ்ரீமீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் உற்சவ சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை சமஸ்தான திவான் மகேந்திரன் ஆலோசனையில் உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் கவனித்தனர்.

    அபிராமம் செங்குந்தர் முதலியார் உறவின்முறைக்குப் பாத்தியமான ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் கோயில், நீராவி தேவாங்கர் செட்டியார் உறவின் முறை ஸ்ரீராமலிங்க செüடாம்பிகை அம்மன் கோயில், பேரையூர் சத்திரிய நாடார் உறவின் முறை ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில்களிலும் கார்த்திகை சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai