சுடச்சுட

    

    : ராமநாதபுரம் இன்னர்வீல் சங்கத்தின் சார்பில் இன்பேன்ட் சீசஸ் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு சங்க மாவட்டத் தலைவர் சைலஜா பங்கஜ் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் அனிதா செந்தில்குமார், செயலர் கவிதா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் விஜயராணி கருணாநிதி வரவேற்றார். விழாவில் மாவட்ட நலத்திட்ட இயக்குநர் டாக்டர் மதுரம் அரவிந்தராஜ், இன்னர் வீல் அமைப்பின் நிர்வாகி கீதா ரமேஷ்பாபு ஆகியோர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் இருவரின் சார்பில் காஷ்மீர் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினர்.

    உறுப்பினர் தனலெட்சுமி பழனிச்சாமி சார்பில் தையல் இயந்திரம், ஜப்பான் நாட்டுக்கு ஜூனியர் ரெட் கிராஸ் முகாமில் பங்கேற்கச் செல்லும் மாணவி ஜெரோன் மதுரத்திற்கு உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம், முதியோர் இருவருக்கு தலா ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai