சுடச்சுட

    

    ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு தேர்ப்பவனி நடைபெற்றது.

    புனித ஜெபமாலை அன்னை ஆலயத் திருவிழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு ஆலயத்தின் முன்பாக தினசரி இரவு நவநாள் திருப்பலி நடந்தது. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக புனித ஜெபமாலை அன்னை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆலயத்திலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. தேரின் முன்புறத்தில் ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்று உடன் வந்தனர். தேர்ப்பவனிக்கு முன்னதாக திருவிழாத் திருப்பலி பங்குத்தந்தை ஏ.ராஜமாணிக்கம் தலைமையிலும், உதவி பங்குத்தந்தை ஏ.ஜான்பிரிட்டோ முன்னிலையிலும் நடைபெற்றது.

    தேர்ப்பவனியை முன்னிட்டு வாண வேடிக்கைகளும் நடந்தன. தேர்த் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai