சுடச்சுட

    

    ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் புல்லங்குடி கிராமத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் முனைவர் டி.சித்திரவேல் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ஜி.ஜீவகன் நாவுக்கரசு லெனின், எம்.எஸ்.மணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர் முனைவர் பி.ராஜ்குமார் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை தேவிபட்டினம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆர்.ராஜ்குமார் சாமுவேல் துவக்கி வைத்தார்.ர ôமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையின் ரத்தவங்கி அலுவலர் மருத்துவர் என்.கருப்புச்சாமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் 61 பேரிடம் ரத்தம் சேகரித்தனர். முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் எஸ்.அய்யப்பன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai