சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பெரியபட்டிணத்தில் சந்தனக்கூடு திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

  பெரியபட்டிணத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு 113-ம் ஆண்டு மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு சந்தனக்கூடு விழாவின் கொடியேற்றம் அக்.1.ல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3மணியளவில் பெரியபட்டிணம் ஜலால்ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து சந்தனக்கூடு புறப்பட்டு தர்காவை வந்தடைந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு கிராமிய நகைச்சுவை தெம்மாங்கு பாடல்கள், இன்னிசை குழு கச்சேரி ஆகியவை நடைபெற்றன. சந்தனக்கூடு திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் சதக்கு, செயலாளர் ஹபீபுல்லா, விழா அமைப்பாளர் அப்துல்மஜீது, இணைத் தலைவர் சிராஜூதீன், துணை தலைவர் சுல்தான் செய்யது இப்ராம்சா, சுல்தானியா சங்க தலைவர் சாகுல்ஹமீது, தொழிலதிபர் சிங்கம் பசீர், ஊராட்சிமன்றத் தலைவர் எம்.எஸ்.கபீர் உள்பட பலர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai