சுடச்சுட

  

  ராமநாதபுரம் தமிழ்ச்சங்க மாதாந்திரக் கூட்டம் கனகமணி வாகன வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க துணைத் தலைவர் வைகிங்.எம்.எஸ்.கருணாநிதி தலைமை வகித்தார். செயலர் கண் மருத்துவர் பொ.சந்திரசேகரன், பொருளாளர் கா.மங்கள சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் கவிஞரின் மனம் கொள் வரிகள் என்ற தலைப்பில் கவிஞர்.குத்புதீனும், கவியரசு பற்றி கவிஞரின் பார்வை என்ற தலைப்பில் கவிஞர் முகவை சந்துரு ஆகியோரும் பேசினர். சங்கத் தலைவர் மை.அப்துல்சலாம் காப்பிய உயிர்நிலை என்ற தலைப்பில் பேசினார். சங்க உறுப்பினர்களான பாடகர்கள் ஆ.ராமச்சந்திரன், கருணாகரன் குழுவினர் இசைத்தமிழின் அற்புதங்கள் என்ற தலைப்பில் பல்வேறு பாடல்களைர் பாடினர்.

  அவர்களுக்கு பரிசும் நன்கொடையும் வழங்கப்பட்டது. தமிழுக்கு மரியாதை என்ற தலைப்பில் கவிஞர்.மகுடதீபன் பேசினார்.

  முன்னதாக பாடகி எஸ்.பிச்சம்மாளின் இறை வாழ்த்துடன் விழா தொடங்கியது. நிறைவாக சங்க துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் நன்றி கூறினார். கூட்டத்தில் மருத்துவர்கள் மதுரம் அரவிந்தராஜ், கமலா ராகுல், புலவர் மாயழகு, கவிஞர்கள் மணிவண்ணன், சக்திசேகரன், பி.வி.எம்.அறக்கட்டளைத் தலைவர் அப்துல்ரசாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai