சுடச்சுட

    

    ராமேசுவரம் திருக்கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை

    By ராமேசுவரம்  |   Published on : 13th October 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜெயலலிதா சிறையிலிருந்து விடுதலையாக வேண்டி ராமேசுவரம் திருக்கோயிலில் அதிமுக சார்பில் சுவாமி, அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன.

    அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் உள்ளார். அவர் விடுதலையாக வேண்டி ராமேசுவரம் திருக்கோயிலில் அதிமுக நகர் நிர்வாகிகள் சார்பில் மூன்றாம் பிரகாரத்தில் ருத்ராபிஷேகம் நடைபெற்றது. கலசத்தில் கோடிதீர்த்த நீரை நிரப்பி பூஜையில் வைத்தனர். கோயில் குருக்கள் மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட புனித நீரை குருக்கள் எடுத்துக்கொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிகளில் அபிஷேகமும், தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடத்தினர்.

    பூஜையில் ராமேசுவரம் நகர்மன்றத் தலைவர் அர்ச்சுனன், அதிமுக நகர் செயலர் பெருமாள், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர் மீனாட்சிசுந்தரம், மண்டபம் ஒன்றிய இளைஞரணி முன்னாள் செயலர் எஸ்.ஆர்.கணேசன், திருக்கோயில் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai