சுடச்சுட

  

  அரசுப் பேருந்து மீது கல்வீச்சு: ஒருவர் கைது

  By திருவாடானை  |   Published on : 14th October 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தொண்டி அருகே அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்தியதாக ஒருவர் கைது செய்யபட்டார். மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

  திருவாடானை தாலுகா சோழியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (40). அதே ஊரைச் சேர்ந்த ராபர்ட் (35) ஆகிய இருவரும் ராமநாதபுரத்தில் இருந்து சிதம்பரம் செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களது ஊர் வந்த போது பேருந்தை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால் பேருந்து நிற்காமல் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொண்டியில் நிறுத்தப்பட்டது.

  இதனால் ஆத்திரம் அடைந்த முனீஸ்வரன், ராபர்ட் இருவரும் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்து வேலங்குடி கிராமத்தின் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து மீது கல் வீசி கண்ணாடியை சேதப்படுத்தினராம்.

  இது குறித்து பேருந்து ஓட்டுநர் சரவணக்குமார் புகாரின் பேரில் தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து முனீஸ்வரனை கைது செய்து தப்பி ஓடிய ராபர்ட்டை தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai