சுடச்சுட

    

    கமுதி அருகே இடத்தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினர் மோதிக் கொண்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அபிராமம் காவல் நிலைய சரகத்தைச் சேர்ந்தது பாப்பணம். இவ்வூரைச் சேர்ந்த முனியாண்டி மகன் ராமர் பிச்சை (50), பாண்டி மகன் பொன்ராஜ் (20) ஆகியோர் இடையே இடத் தகராறு இருந்து வந்ததாம். இதில் இரு தரப்பினர் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர்.

    இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து, கமுதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மோதல் குறித்து அபிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சார்பு ஆய்வாளர்கள் லட்சுமி, நீலமேகம் ஆகியோர் இரு தரப்பிலும் 2 வழக்குகள் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai