சுடச்சுட

  

  கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ். மா ணவர்கள் 7 நாள் சிறப்பு சேவை முகாம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

  முத்துநகர் குடியிருப்பு பகுதியில் முகாமை தலைமை ஆசிரியர் செ. மலையரசன் தலைமையில், பள்ளித் தாளாளர் ம. கணேஷ் தொடங்கி வைத்தார். தெரு வளாகம், பள்ளி வளாகம், பள்ளி மைதானத்துக்குச் செல்லும் பாதை உள்ளிட்டவை தூய்மைப்படுத்துதல், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு, புகையிலையின் தீமை, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுத்தல், சுற்றுச்சூழலைப் பேணுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன.

  முகாம் ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஆலோசனையில், திட்ட அலுவலர், ஆசிரியர் ஜி. செந்தில்குமார், உதவி அலுவலர், ஆசிரியர் செ. மாரிமுத்து உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai