சுடச்சுட

  

  கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில் அபிராமம் காவல் நிலையம் சேர்ப்பு

  By கமுதி,  |   Published on : 14th October 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில், அபிராமம் காவல் நிலையம் சேர்க்கப்பட்டுள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில் சத்திரக்குடி, நயினார்கோவில், பரமக்குடி தாலுகா, பரமக்குடி நகர், பார்த்திபனூர் ஆகிய காவல் நிலையங்கள் இருந்து வந்தன. இதில் அபிராமம் காவல் நிலையம் தவிர மற்றவை பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்தவை ஆகும். கமுதி தாலுகாவைச் சேர்ந்தது அபிராமம் காவல் நிலையம்.

  நீண்ட காலமாக கமுதி தாலுகா உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தில் அபிராமம் காவல் நிலையம் சேர்க்கப்படாமல் இருந்து வந்தது. கமுதிக்கு மிக அருகில் உள்ள அபிராமம் காவல் நிலையத்தினர் அதிக தூரத்தில் உள்ள பரமக்குடிக்குச் சென்று உதவி காவல் கண்காணிப்பாளரை சந்திக்க வேண்டி இருந்தது. இதனால் வீண் அலைச்சல், வேலைப் பளு அதிகமாக இருந்தது.

  அதே சமயம் கமுதியில் உள்ள நீதிமன்றம், அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் ஆகியவற்றுக்கு அபிராமம் காவல் நிலையத்தினர் வந்து செல்கின்றனர். எனவே அபிராமம் காவல் நிலையத்தை, கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தால் போலீஸ் நிர்வாகப் பணி சிறப்பாக இருக்கும் என்று நீண்ட காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.

  இதையடுத்து தற்போது தமிழக காவல் துறை இயக்குநர் உத்தரவில், அபிராமம் காவல் நிலையத்தை, கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் நிர்வாகத்தின் கீழ் சேர்த்துள்ளனர். இத்துடன் புதிதாக அபிராமம் காவல் நிலைய ஆய்வாளராக பாலமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அபிராமம் உள்ளிட்ட 59 ஊர்கள் காவல் நிலையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai