சுடச்சுட

  

  கோடி தீர்த்த பாட்டிலுக்கு கூடுதல் விலை:நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

  By ராமேசுவரம்  |   Published on : 14th October 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமேசுவரம் திருக்கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் கோடி தீர்த்தப் பாட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக இந்து முன்னணி புகார் தெரிவித்துள்ளது.

  ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் புனித தீர்த்தத்தை வாங்கிச் செல்வதற்காக நுழைவு வாயில், சுவாமி, அம்பாள் சன்னதி அருகில் கடைகள் அமைத்து பாட்டிலில் கோடி தீர்த்தம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ரூ.20 என கோயில் நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

  ஆனால், தீர்த்த பாட்டிலுடன் விபூதி, குங்குமம் கவரையும் சேர்த்து ரூ.30க்கு கூடுதல் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

  கோயிலில் இலவசமாக விபூதி, குங்குமம் கொடுக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. புனித தீர்த்தத்தை ரூ.20க்கு விற்பனை செய்ய வேண்டும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மாவட்டச் செயலர் ராமமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai