Enable Javscript for better performance
சமையல் செய்த பெண் கருகிச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    சமையல் செய்த பெண் கருகிச் சாவு

    By கமுதி,  |   Published on : 14th October 2014 12:26 AM  |   அ+அ அ-   |    |  

    கமுதி அருகே பெருநாழி காவல் நிலைய சரகம், உச்சிநத்தத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மகள் உமயலட்சுமியை (23) தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் காவல் நிலைய சரகம் மேலகல்லூரணியைச் சேர்ந்த கந்தவேல் (28) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. கந்தவேல் ஒட்டோ ஓட்டி வருகிறார்.

    இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த உமயலட்சுமி, சமையல் செய்து கொண்டிருந்த போது அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்து விட்டதாம். இதனால் உடல் கருகிய உமயலட்சுமி, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்

    சம்பவம் குறித்து பெருநாழி காவல் நிலையத்தில் தந்தை சிவசுப்பிரமணியன் புகார் செய்தார். ஆய்வாளர் குமரன், சார்பு ஆய்வாளர் ரகுபதி ராஜ் ஆகியோர் வழக்குப் பதிந்து, உமயலட்சுமி சடலத்தைக் கைப்பற்றினர். கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ். சுந்தரவடிவேல், தூத்துக்குடி சார் ஆட்சியர் கோபால சுந்தரம் ஆகியோர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai