சுடச்சுட

    

    திருவாடானை அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    By திருவாடானை  |   Published on : 14th October 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாடானை தாலுகா பாசிபட்டிணம் கிராமத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது. இது குறித்து போலீôஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    திருவாடானை தாலுகா பாசிபட்டிணத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (50). இவர் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டுக்கு வெளியூர் சென்றுள்ளார்.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ஒரு பவுன் நகை ரொக்கம் ரூ.7 ஆயிரத்தை திருடிச் சென்று விட்டனர்.

    இது குறித்து ராஜம்மாள் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.பி. பட்டிணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai