சுடச்சுட

  

  பழங்குடி, நாடோடிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

  By ராமநாதபுரம்,  |   Published on : 14th October 2014 12:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொலை வழக்கை சாதாரணை வழக்காக பதிவு செய்ததைக் கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக பழங்குடி, நாடோடிகள் கூட்டமைப்பு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

  தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பின் நிறுவனர் ஆர். மகேசுவரி, தலைவர் ஏ. முத்துலட்சுமணராவ், செயலர் எம்.ஆர். முருகன் மற்றும் அக்கூட்டமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

  அக்கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:

  ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் கடந்த 12.7.2014 ஆம் தேதி நாடோடி இனத்தைச் சேர்ந்த கு. ஹரிராமனும், அவரது மனைவி மூக்கம்மாளும் தூங்கிக் கொண்டிருந்த போது கோவிந்தன் என்பவர் மூக்கம்மாளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

  இதனைத் தட்டிக் கேட்ட கணவர் ஹரிராமனை நாகநாதன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டார். இக்கொலை வழக்கு ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் சாதாரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனை கொலை வழக்காகப் பதிவு செய்ய வேண்டும். ஹரிராமனின் மனைவிக்கு நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். நாடோடி இன மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai