சுடச்சுட

  

  ராமேசுவரத்தில் மின் கசிவால் மீனவர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமாயின. இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

  ராமேசுவரம் செம்மடம் பகுதியைச் சேர்ந்த சேது மகன் ஜெயக்குமார். மீனவர். குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் மீனவர் ஜெயக்குமார் வெளியூருக்கு சென்று விட்டாராம். அவரது மனைவி விஜயலெட்சுமியும் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றுள்ளார்.

  அப்போது திங்கள்கிழமை பகலில் திடீர் என மின் கசிவு ஏற்பட்டதையடுத்து கூரை வீடு பற்றி எரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ராமேசுவரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி கேசவதாசன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்து வந்தனர். இந்த சமயத்தில் அந்த பகுதியில் காற்று வேகமாக வீசியதால் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டுக்குள் இருந்த பீரோ, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி, அடுப்பு உள்பட ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான பொருள்களும் எரிந்த நாசமாயின. மேலும் குடும்ப அடையாள அட்டை, மீனவர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களும் தீயில் எரிந்து கருகின. அப்பகுதியில் இருந்த வாழை மரங்கள், முருங்கை மரங்கள் மற்றும் பூச்செடிகளும் எரிந்து சாம்பலாயின.

  இச்சம்பவம் குறித்து ராமேசுவரம் நகர் காவல் நிலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai