சுடச்சுட

  

  ராமநாதபுரத்தைவறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரிக்கை

  By ராமநாதபுரம்  |   Published on : 14th October 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்குமாறு அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  ராமநாதபுரம் பாண்டித்துரை வணிக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவர் ஆர். பாலசுந்தர மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே. அங்குச்சாமி, துணைத்தலைவர் காசிநாதன், துணைச் செயலாளர் மலைச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஆர். சுந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

  கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பயிர்க் காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். வைகை அணியிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 24 ஆம் தேதி ராமநாதபுரம் அரண்மனை முன் மாவட்ட அளவில் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai