சுடச்சுட

  

  சாயல்குடி மலட்டாறு அருகே சாலையில் நடந்து சென்றவர் மீது லாரி மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி மலட்டாறு அருகே ஒப்பிலானைச் சேர்ந்த சம்சுதீன் மகன் இபுராஹிம் ஷா கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது ராமநாதபுரத்திலிருந்து சாயல்குடி வந்த லாரி நிலை தடுமாறி இபுராஹிம் ஷா மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை ராமநாதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  விபத்து குறித்து இபுராஹிம்ஷா உறவினர் அப்பாஸ் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததின் பேரில் சார்பு ஆய்வாளர் கணேச மூர்த்தி, புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் உலகநாதன் என்ற ஐயப்பன் மீது வழக்குப் பதிவு செய்தார். லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai