சுடச்சுட

  

  ராமநாதபுரம் பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளின் தேவைக்காக வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவு நெல் சான்று விதைகள் இருப்பில் உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் ஆர். ராமசாமி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  ராமநாதபுரம் வட்டாரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 67 மி.மீ. மற்றும் இம்மாதம் 13ஆம் தேதி வரை 40 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இம்மழையைப் பயன்படுத்தி

  விவசாயிகள் மானாவாரி நெல்விதைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள். ராமநாதபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 30 மெ.டன் பிபிடி.5204 சான்று பெற்ற நெல் விதை

  இருப்பில் உள்ளது. இவற்றை விவசாயிகள் வாங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

     கண்மாய் பாசனப்பகுதி விவசாயிகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மழையைப் பயன்படுத்தி நெல் விதைப்பு செய்து விட்டு கண்மாய்க்கு தண்ணீர் பின்னர் கிடைக்கப்

  பெற்றால் பகுதி பாசன நெல் சாகுபடிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

    எனவே விவசாயிகள் தங்களது நிலத்தை தரிசாக விடாமல் சாகுபடி செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நெல்பயிர் ஆரம்ப கட்ட வறட்சியைத் தாங்கி வளர நெல் விதைக்கு பொட்டாஷ் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மேலும் தழைச்சத்துக்கான செலவில் 25 சதம்

  குறைப்பதற்கு நெல் விதைக்கு அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

     திரவம் மற்றும் திட நிலையிலான அசோஸ்பைரில்லம் போதுமான அளவு ராமநாதபுரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள்

  இவற்றைப் பெற்று பயனடையலாம் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai