சுடச்சுட

    

    பாம்பன் கடலில் படகிலிருந்து தவறி விழுந்து மீனவர் சாவு

    By DN  |   Published on : 15th October 2014 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பன் கடல் பகுதியில் நிறுத்தியிருந்த படகில் பணி செய்து கொண்டிருந்த மீனவர் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புப்

    படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

      ராமேசுவரம் அருகே பாம்பன்  லைட்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின் மகன் மீனவர் இன்னாசி (45). இவர் அதே பகுதியைச் சேர்ந்த டைஸ்மேரி என்பவருக்குச்

    சொந்தமான நாட்டுப் படகில் கூலி வேலைக்கு மீன் பிடித் தொழில் செய்தார்.

    இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியிலிருந்து 2 மைல் நாட்டிக்கல் தூரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகில் மீனவர்

    இன்னாசி செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதற்காக முன்னேற்பாடுகளைச் செய்வதற்கு சென்றுள்ளார்.

      இந்த நிலையில், மீனவர் இன்னாசி இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வராததை அறிந்த குடும்பத்தினர், பாம்பன் கடைத் தெரு, கடற்கரைப் பகுதியில் தேடியுள்ளனர்.  

    அப்போது அவர் படகுக்குச் சென்றதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர், அப் பகுதி மீனவர்கள் இன்னாசி மீன்பிடிக்கச் செல்லும் படகுக்கு பார்க்கச் சென்றுள்ளனர்.

    அப்போது அவர் படகின் அருகே இறந்த நிலையில், கடலில் மிதந்து கிடந்துள்ளார். அதன்பின்னர், மீனவர்கள் உடலை மீட்டு, கரைப் பகுதிக்கு கொண்டு வந்தனர்.

       பின்னர், மண்டபம் கடலோரப் பாதுகாப்பு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், அப் பகுதிக்கு வந்த போலீஸார் மீனவரின் உடலைக் கைப்பற்றி வழக்குப்

    பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai