சுடச்சுட

  

  கமுதி அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து  வட்டாட்சியரிடம் ஒப்படைத்னர்.

    கமுதி பகுதியில் ஆற்று மணல் கடத்தலை தடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் க.நந்த குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகனன் ஆகியோர்

  உத்தரவிட்டுள்ளனர்.

     இதையடுத்து வட்டாட்சியர் பி.நாகநாதன் தலைமையில் வருவாய்த்துறையினரும், உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேல் தலைமையில் போலீஸாரும்

  தினசரி ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

      இந்த நிலையில் காவல் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் தங்கப்பாண்டியன், திலகவதி, மாடசாமி ஆகியோர் போலீஸாருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த

  போது, எதிரே ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டரை கண்டு  கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக, வட்டாட்சியர் பி.நாகநாதனிடம் ஒப்படைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai