சுடச்சுட

  

  மண்டபம் கடலோரப் பகுதியில், இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை வனச் சரக அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின் உள்பட நூற்றுக்கணக்கான அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு தேடி ஆழ்கடல்

  பகுதியில் இருந்து வெளியே வரும்போது, பாறைகளிலும், மீன்பிடிப் படகுகளிலும் சிக்கி காயமடைந்து ,இறந்து கரை ஒதுங்குகின்றன.

   இந்த நிலையில், மண்டபம் தெற்கு அய்யனார் கோயில் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரத்தக் காயத்துடன் இறந்த நிலையில்  டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது.

   இதுகுறித்து அப் பகுதி மீனவர்கள் அளித்த தகவலின்பேரில், மண்டபம் வனச் சரக அதிகாரிகள் டால்பினை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்குப் பின் புதைத்தனர். இறந்த

  டால்பின் 200 கிலோ எடை இருக்கும் எனத் தெரிவித்த அதிகாரிகள், டால்பின் கரை ஒதுங்கியது குறித்து வழக்குப் பதிந்து, மீனவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai