சுடச்சுட

  

  பரமக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

  ராமேசுவரத்திலிருந்து அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, சத்திரக்குடி தெய்வேந்திரநல்லூர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்ற 27 வயது மதிக்கத்தக்க இளைஞர் மீது பேருந்து மோதியது. இதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இறந்த இளைஞர் யார் என அடையாளம் தெரியவில்லை. சாம்பல் நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், கழுத்தில் செயின் ஒன்றும் அணிந்துள்ளார். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai