சுடச்சுட

  

  உத்தரகோசமங்கை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  ராமநாதபுரம் முகவை ஊரணி மேல்கரை பகுதியைச் சேர்ந்தவர் காஜாமைதீன் மகன் பைசல்நபீஸ் (23). இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மேலாளர் மாணிக்கராஜ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தேரிருவேலி சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். உத்தரகோசமங்கை அருகே வெள்ளா பகுதியில் வந்தபோது பாலத்தின் அருகே மறைந்திருந்த 3 நபர்கள் இருசக்கர வாகனத்தை வழிமறித்து மோதிரம், தங்கச்சங்கிலி, கைச்செயின் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகளையும்,2 செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

  இது சம்மந்தமாக பைசல்நபீஸ் உத்தரகோசமங்கை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் உதவி ஆய்வாளர் கோட்டைசாமி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai