சுடச்சுட

  

  கமுதி-கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில், தேவரின் ஆன்மிக வாழ்க்கை புகழ் குறித்து, சிறப்பு சொற்பொழிவு, செ வ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  பசும்பொன் தேவரின் 107-ஆவது ஜயந்தி விழா மற்றும் 52-ஆவது குருபூஜை விழா ஆகியவை அக்.30-ஆம் தேதி, கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட வளாகத்தில் பெற உள்ளது. இதை முன்னிட்டு தேவர் நினைவு கல்லூரி வளாகத்தில் முதல்வர் மணிமாறன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

  நிகழ்ச்சியில் பேராசிரியர்,கு.ஞானசம்பந்தன் பங்கேற்று, பசும்பொன் தேவரை மனித கடவுளாக உருவாக்கிய புனித ஆன்மிக வாழ்க்கை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழி வாற்றினர். நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் சங்கத் தலைவரும், வழக்குரைஞர் எஸ்.முத்துராமலிங்கம், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் தமிழ்மாறன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai