சுடச்சுட

    

    சாயல்குடி பேரூராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

    கருத்தரங்குக்கு பேரூராட்சித் தலைவர் ராஜலெட்சுமி கண்ணப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் அபுல்கலாம் ஆசாத், பேரூராட்சி அலுவலர்கள் பாஸ்கரன், முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது பற்றியும், தண்ணீரை தேக்கம் இல்லாமல் சுத்தம் செய்வது குறித்தும் வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் விளக்கம் அளித்தார்.

    நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai