சுடச்சுட

    

    பரமக்குடி பகுதியில் பலத்த மழை: மரங்கள் வேருடன் சாய்ந்தன

    By பரமக்குடி  |   Published on : 17th October 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்கு பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

    பரமக்குடி சுற்றுப்பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை இரவு இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் நகரின் தெருக்கள் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளம்போல் காட்சியளித்தது.

    இம்மழைக்கு பரமக்குடி நகர் காவல் நிலையம் பகுதியில் உள்ள 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அத்தி மரம் வேருடன் சாய்ந்து, அருகில் இருந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தில் விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு குழந்தைகள் மற்றும் காப்பாளர்கள் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தடுக்கப்பட்டது.

    இதேபோல் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்து மின்கம்பங்களில் விழுந்ததால் இரவு முழுவதும் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai