சுடச்சுட

    

    பரமக்குடி பள்ளியில் தேசிய பேரிடர் மேலாண்மை தினம்

    By பரமக்குடி,  |   Published on : 17th October 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி செüராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

    இவ்விழாவுக்கு துணை ஆட்சியர் சமீரன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் து.காளிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.நாகராஜன் வரவேற்றார்.

    விழாவில் தீயணைப்பு நிலைய அலுவலர் தெய்வேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு முறைகளை செய்து காட்டினர்.

    இதில் பேரிடரில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை செய்தல், சுயநினைவு இல்லாதவர்களை கயிறு மூலம் மேலிருந்து கீழே கொண்டு வந்து சிகிச்சை அளித்தல், சுயநினைவு அற்றவர்களை ஏணி மூலம் மேலிருந்து கீழே கொண்டு வருவது.

    தீயில் சிக்கிக்கொண்டவர்களை தீ தடுப்பு உடை அணிந்து மீட்டு வந்து சிகிச்சையளிப்பது, விஷவாயு தாக்கியவர்களை மூச்சுக்கருவி அணிந்து மீட்பது உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை முறை மற்றும் மீட்புப்பணிகள் குறித்து மாணவர்களிடம் விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். வருவாய் ஆய்வாளர் ஆர்.பாலமுருகன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai