சுடச்சுட

  

  மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளர் உயிரிழந்தார்.

  பரமக்குடி எமனேசுவரம் ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர் மகன் லெட்சுமணன் (48). இவர் பரமக்குடி பெருமாள் கோவில் தெருவில் உணவகம் நடத்தி வந்தார். வியாழக்கிழமை லெட்சுமணன் உணவகத்துக்கு தேவையான மாவுக்காக அரிசியை கிரைண்டரில் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லெட்சுமணன் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  அவரது உடல் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைக்குப் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் அவரது மனைவி அன்னமயில் (45) அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai