சுடச்சுட

  

  ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா அமைப்பின் சார்பில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் உலக கை கழுவும் தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

  நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் பாபு அப்துல்லா தலைமை வகித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கைகளை எவ்வாறு சுத்தம் செய்வது என செயல்முறை விளக்கம் அளித்தார்.

  தலைமை ஆசிரியர் காஜா முகைதீன், உதவித் தலைமை ஆசிரியர் ஜாகீர்ஹுசேன், இந்திய செஞ்சிலுவைச் சங்க நிர்வாகி சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவ கேந்திரா ஒருங்கிணைப்பாளர் இரா. மதிவாணன் தூய்மையான பாரதத்தின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார்.

  நேரு யுவகேந்திரா அமைப்பின் சிறுவயல் கிராமத் தலைவர் பரமேசுவரன் நன்றி கூறினார்.

  நிகழ்ச்சியின் போது பாரதத்தை தூய்மையாக வைத்திருப்பேன் என்ற உறுதிமொழியை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எடுத்துக்கொண்டனர். முன்னதாக அனைவரும் கைகளை சோப்பு போட்டு சுத்தம் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai