சுடச்சுட

  

  ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மற்றும் தலைமை அரசு மருத்துவமனை ஆகியன இணைந்து தன்னார்வ ரத்த தான முகாமினை புதன்கிழமை நடத்தினார்கள்.

  முகாமுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குநர் எஸ்.எம்.ரவி தலைமை வகித்தார்.

  செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரிச் செயலர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா, தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி, நிலைய மருத்துவ அலுவலர் சகாய ஸ்டீபன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கல்லூரி முதல்வர் பி.மாரிமுத்து வரவேற்று பேசினார். ரத்த வங்கி மருத்துவர் கருப்புச்சாமி தலைமையிலான குழுவினர், 72 பேரிடம் ரத்தம் சேகரிப்பு பணியினை செய்தார்கள்.

  முகாமுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் எஸ்.அய்யப்பன் செய்திருந்தார்.

  நிறைவாக கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எம்.முரளிக்கண்ணன் செய்திருந்தார்.

  முகாமில் அதிகமுறை ரத்ததானம் செய்த பத்மநாபன், பிரதீபன், சக்கரவர்த்தி, மலர்செல்வன், இளங்கோவன், தினேஷ் பாபு ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai