சுடச்சுட

  

  முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

  முதுகுளத்தூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் எஸ்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் பால்சாமி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி, தாலுகா அலுவலகத்தில் தொடங்கி காந்தி சிலை,பேருந்து நிலையம் வழியாக அரசு மருத்துவனையில் நிறைவு பெற்றது.

  பேரணியில் அரசுப் பள்ளி என்.சி.சி.திட்ட அலுவலர் எஸ்.துரைப்பாண்டியன், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் சிக்கந்தர், ஆசிரியர்கள் சிவக்குமார், பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  கடலாடியில் விழிப்புணர்வு பேரணி: கடலாடியில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்கு தாசில்தார் ரவிராஜ் தலைமை வகித்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் வைரமோகன், வருவாய் அலுவலர்கள் தினகரன், விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  பேரணியில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் பி.டி.சுரேஸ், என்.சி.சி.திட்ட அலுவலர் சொக்கர், தேர்தல் பிரிவு உதவியாளர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

  கமுதியில்: சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை, வட்டாட்சியர் பி.நாகநாதன், தலைமையில், தலைமை ஆசிரியர் செ.மலையரசன் முன்னிலையில், பேரூராட்சி தலைவர் எஸ்.கே.சி.ரமேஷ் பாபு துவக்கி வைத்தார். பேரணியில் தாலுகா வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சுந்தரராஜன், கிராம நிர்வாக அலுவலர் போஸ், தேர்தல் பிரிவு அலுவலர்கள், என்.எஸ்.எஸ், என்.சி.சி. தேசிய பசுமைப்படை, ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு கோஷங்களை, பேரணியினர் முழங்கியபடி சென்றனர். பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai