சுடச்சுட

    

    எஸ்.ஐ.யை பணிநீக்கம் செய்யும் வரைபோராடுவோம்: ராமநாதபுரம் எம்.எல்.ஏ.

    By ராமநாதபுரம்,  |   Published on : 18th October 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த எஸ்.ஐ.யை பணிநீக்கம் செய்யும் வரை தொடர்ந்து போராட முடிவு செய்திருப்பதாக எம்.எல்.ஏ. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இளைஞர் செய்யது முகம்மதுவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த எஸ்.ஐ. காளிதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவரை வேலைநீக்கம் செய்ய வேண்டும்.

    அதுவரை தொடர்ந்து போராட முடிவு செய்துள்ளோம். கொலைக்கு உடந்தையாக இருந்த அக்காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 போலீஸாரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு செய்யது முகம்மதுவின் குடும்பத்தினருக்கு ரூ.5லட்சம் நிவாரணநிதியாக வழங்கியிருக்கிறது. இது போதாது. மேலும் 5 லட்சம் தரப்பட வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி உடலை பெற்றுக்கொண்டு நல்லடக்கம் செய்திருக்கிறோம். எஸ்.ஐ. மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். செய்யது முகம்மதுவின் மரணம் கடைசி காவல்நிலைய மரணமாக இருக்க வேண்டும் என்றும் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai