சுடச்சுட

  

  தேவகோட்டையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்ததை நகராட்சி முன்பாக கொட்டும் மழையிலும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

  தேவகோட்டை நகராட்சி முன்பாக நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் அதிமுகவினர் கூடினர்.

  பின்னர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், கோஷமிட்டும் கொட்டும் மழையிலும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  இந் நிகழ்ச்சியில் தேவகோட்டை நகர்மன்ற உறுப்பினர்கள் ரமேஷ், சிலோன் பாலு, சிவகுமார், சுப்பிரமணியன், சரவணன், இளைஞர் அணி கார்த்திக், வட்டச் செயலாளர் ராதா மற்றும் அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.

  காரைக்குடி: காரைக்குடியில் நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையில் அதிமுகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

  இதில் நகர் இளைஞரணி செயலாளர் இயல்தாகூர், நகரச் செயலாளர் மெய்யப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

  சிவகங்கை: சிவகங்கையில் அதிமுக நகர செயலாளர் ஆனந்தன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரன், நகர துணைத் தலைவர் ஏ.வி.சேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் வீதி வீதியாகச் சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலையானதையொட்டி, அ.தி.மு.க.வினர் வேலங்குடி சாம்பிராணி கருப்பர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

  பின்னர், திருப்பத்தூர் காந்தி சிலையருகே கூடிய அ.தி.மு.க.வினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

  இந் நிகழ்ச்சியில், திருப்பத்தூர் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் முருகேசன், நகரத் துணைச் செயலாளர் பிரேம்குமார், பேரூராட்சித் தலைவர் சோமசுந்தரம், நெற்குப்பை பேரூராட்சித் தலைவர் சஞ்சீவி, நகர ஜெயலலிதா பேரவை இப்ராம்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  திருப்புவனம்: மடப்புரத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

  திருப்புவனம் ஒன்றியக் குழுத் தலைவர் பாக்கியலெட்சுமி அழகுமலை, ஒன்றியச் செயலாளர் கணேசன், அம்மா பேரவைச் செயலர் சொக்கநாதன், பூவந்தி ஆறுமுகம் மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், அதிமுகவினர் உள்பட பலரும் வெடிகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai