சுடச்சுட

  

  சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்பாச்சேத்தி வருவாய் பிர்க்காவுக்கு உட்பட்ட செல்லப்பனேந்தல் கிராமத்தில் இரண்டாவது சுற்று அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  இம் முகாமுக்கு மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் யுவராஜா தலைமை வகித்தார். வட்டாட்சியர் காசி முன்னிலை வகித்தார்.

  இம் முகாமில் பயனாளிகளிடமிருந்து 47 மனுக்கள் பெறப்பட்டன. அதனை பரிசீலனை செய்ததில், 46 மனுக்கள் தகுதியானவையாக கருதப்பட்டு, பட்டா மாற்றத்துக்கான உத்தரவு, ஏற்கனவே உள்ள குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,திருத்தம், நீக்கம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு சான்றிதழை மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் யுவராஜா வழங்கினார். மேலும், மீதமுள்ள மனுவை பரிசீலனை செய்து பயனாளிக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படும் என காசி தெரிவித்துள்ளார்.

  மேலும், மண்டல துணை வட்டாட்சியர் பஞ்சவர்ணம், வட்ட வழங்கல் அலுவலர் தனபால், தனி வட்டாட்சியர் (ச.பா.தி) கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் சந்திரபோஸ், நில அளவையர் முனியாண்டி, கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட வருவாய் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai