சுடச்சுட

    

    தேவகோட்டை அருகே கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை

    By தேவகோட்டை  |   Published on : 18th October 2014 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேவகோட்டை அருகே தென்னீர்வயல் கிராமத்தில் உள்ள காஞ்சிரங்காளியம்மன் கோயில் உண்டியலை உடைத்து பல லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    தென்னீர்வயல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காஞ்சிரங்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஊருக்கு வெளிய கண்மாய்கரையில் அமைந்து, காவல் தெய்வமாக விளங்குகிறது. இந்நிலையில் வியாழக்கிழணை இரவு மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

    காலையில் பொதுமக்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai