சுடச்சுட

  

  பரமக்குடி நீதிமன்றத்தில் நிரப்பப்படாத நீதிபதிகளின் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.

  பரமக்குடி வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்கு அதன் தலைவர் கே.வி.ஆர்.கந்தசாமி தலைமை வகித்தார். செயலாளர் எஸ்.செல்லமணி, பொருளாளர் ஆர்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டத்தில், பரமக்குடி நீதித் துறை நீதிமன்ற நீதிபதி பணியிடம் கடந்த 10 மாதங்களாக நிரப்பப்படாமலும், அதேபோல் சார்பு நீதிமன்ற நீதிபதி பணியிடம் கடந்த 3 மாதங்களாக நிரப்பப்படாமலும் உள்ளது. இதனால் வழக்குரைஞர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். உடனே அப் பணியிடத்தில் நீதிபதிகளை நியமனம் செய்யக்கோரி முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மற்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோரை சங்க நிர்வாகிகள் சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai